திருக்குறள்
1. திருக்குறள் -திரு +குறல்.
2. வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின் இப்பெயர் பெற்றது.
3. குறல் என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ஆகுபெயர் ஆகும்.
4. திருக்குறள் என்பது அடையடுத்த ஆகுபெயர் ஆகும் .
5. இது பதினெண் கீழ்கணக்குக்கு நூல்களுள் ஒன்று.
6. பதினெண் கீழ்கணக்குக்கு நூல்களுள் அதிக பாடல்களையும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்.
7.தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்பெறும் நூல்.
8, இதுவே தமிழர் திருமறை , உலக பொதுமறை ஆகும்.
9. “ குறள் ” என்பது இரண்டடி வெண்பாவைக் குறிக்கும் . அது “ திரு ” என்னும் சிறப்பு அடைமொழி பெற்று நுலைக்குறிக்கிறது.
10. ஆங்கிலம் , இலத்தின் , கிரேக்கம் போன்ற 107 மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.
11. “ ஆலும் வேலும் பல்லுக்குறுதி ,
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்றும்
“ பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் ” என்னும் பழமொழிகள் இதன் பெருமையை விளக்குவனவாகும். இவற்றுள் “ நால் ” என்பது நாலடியாரையும் “ இரண்டு ” என்பது திருக்குறளையும் குறிக்கும்.
12. மனிதன் மனிதனாக வாழ , மனிதன் மனிதனுக்குக் கூறிய அறிவுரைதான் திருக்குறள்.
13. “ அ ” கரத்தில் தொடங்கி “ ன ” கரத்தில் முடியும் நூல்.
14. திருக்குறளின் பெருமையை கூறும் நூல் திருவள்ளுவமாலை. இதில் 55 பாடல்கள் 53 புலவர்களால் பாடப்பட்டுள்ளது.
15. சிவசிவ வெண்பா , தினகர வெண்பா , வடமாலை வெண்பா , சோமேசர் முதுமொழி வெண்பா , குமரேச வெண்பா போன்றவனவும் திருக்குறலின் சிறப்பையே கூறுகின்றன.
16. மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் 1812 ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்,
17.பரிமேலழகர் உரையுடன் முதன் முதலாகத் திருக்குறளைப் பதிப்பித்தவர் இராமானுஜர் கவிராயர் ( 1840 ).
18.விக்டோரியா மகாராணியார் காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
19. திருக்குறளின் பெருமையை உணர்ந்த வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.
20. திருக்குறளை 40 ஆண்டுகள் படித்துச் சுவைத்த ஜி.யு.போப் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886 ஆம் ஆண்டில் வெளிட்டார்.
Download For the pdf clik here
No comments:
Post a Comment